1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (20:38 IST)

பிரான்ஸ் வெற்றியை தாய்லாந்து சிறுவர்களுக்கு அர்பணித்த போக்பா

உலக கால்பந்து போட்டியில் அரையிறுதியில் பெற்ற வெற்றியை பிரான்ஸ் அணியின் வீரர் பவுல் போக்பா தால்லந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணித்துள்ளார்.

 
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கால்பந்து போட்டியின் நேற்றைய அரையிறுதி அட்டத்தில் பிரான்ஸ் அணி பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
 
இந்த வெற்றியை பிரான்ஸ் கால்பந்து அணியின் வீரர் பவுல் போக்பா தாய்லந்து குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 12 சிறுவர்கள் தங்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக்கொண்டனர். 18 நாட்களுக்கு பின்னர் அவர்களை அனைவரையும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
 
இந்த சம்பவம் உலகம் முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.