1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (06:18 IST)

உலகக்கோப்பை கால்பந்து: இறுதி போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியத்தை வீழ்த்தியது

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பிரான்ஸ் அணி, பெல்ஜியம் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
நேற்றைய பிரான்ஸ்-பெல்ஜியம் அரையிறுதி ஆட்டம் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோல் போட தீவிரமாக விளையாடினர். பெல்ஜியம் அணிக்கு பலமுறை கோல் போட வாய்ப்பு இருந்தபோதிலும் பிரான்ஸ் அணியின் கோல்கீப்பர் ஒன்றைக்கூட கோலாக்க விடவில்லை. அதேபோல் பெல்ஜியம் கோல்கீப்பரும் அபாரமாக செயல்பட்டதால் முதல் பாதியின் முடிவில் பிரான்ஸ் அணியாலும் கோல் போடமுடியவில்லை
 
இந்த நிலையில் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் அபாரமாக ஒரு கோல் போட்டு தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். அதன்பின்னர் பெல்ஜியம் அணி கோல் போட எடுத்த முயற்சிகள் பயனளிக்காததால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 
 
இன்று குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மற்றொரு அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது.