திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஜூலை 2024 (21:39 IST)

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி.! இந்திய ஆண்கள் அணி காலிறுதிக்கு நேரடி தகுதி.!!

Indian Mens Team
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி நேரடியாக கால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் ஜூலை 30-ம் தேதி தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு தரவரிசை பெறுவதற்கான சுற்று இன்று நடைபெற்றது. அதன்படி இன்று  பெண்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள்  4-வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர். 
 
இந்நிலையில் ஆண்களுக்கான போட்டியில் இந்தியாவின் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். திராஜ் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண்தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் பெற்றனர். 

 
மொத்தமாக 2013 புள்ளிகள் பெற்று இந்திய அணியினர் 3-வது இடம் பிடித்தனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது.  தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.