1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (19:06 IST)

தன்னுயிரை நீத்து மாணவர்கள் உயிர்காத்த ஓட்டுநர்: புகழுருவில் வாழ்வார் என முதல்வர் இரங்கல்..!

திருப்பூரில் தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் மலையப்பன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு வந்ததை அடுத்து அவர் மாரடைப்பு வலியிலும் வாகனத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். அதன் பிறகு சில நொடிகளில் அவர் ஸ்டீயரிங் மீது சாய்ந்து மயக்கம் அடைந்தார்.

இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்த விட்டதாக தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் அவர் வாகனத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளை காப்பதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்தியதை அடுத்து அவருக்கு இறந்த பின்னர் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.இந்த நிலையில் உயிரிழந்த ஓட்டுனருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!

Edited by Mahendran