புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (12:07 IST)

உலகக்கோப்பை 2019 – பாகிஸ்தான் அணி அறிவிப்பு !

அடுத்தமாதம் தொடங்க இருக்கும் உலகக்கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து , ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்து விட்டன. உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்க கடைசி நாள் ஏப்ரல் 23 ஆகும்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜூனைத் கான் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான முகமது ஹஃபீஸ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி விவரம் :-
சர்பிராஸ் அகமது(கேப்டன்), பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷாதப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஜுனைத் கான், முகமது ஹஸ்னைன்