1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 டிசம்பர் 2021 (08:08 IST)

63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி: அதிரடி ஆட்டக்காரருக்கு ஆட்டநாயகன் விருது!

63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி: அதிரடி ஆட்டக்காரருக்கு ஆட்டநாயகன் விருது!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் நேற்று கராச்சியில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
 
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. முகமது ரிஸ்வான் 78 ரன்களும் ஹைதர் அலி 68 ரன்களும் எடுத்தனர் 
 
இந்த நிலையில் 201 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அடுத்து பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தான் அணியின் ஹைதர் அலி 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்ததை அடுத்து அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது