வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:58 IST)

பாகிஸ்தான் தொழிற்சாலைகளை மூடிவிடலாமா? உ.பி அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி !

டெல்லியில் நிலவும் காற்று மாசுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் தான் காரணம் என நீதிமன்றத்தில் உத்தரபிரதேசத்த் அரசு வாதம் செய்துள்ளது.

டெல்லி யூனியன் நிலவும் காற்று மாசுக்கு என்ன காரணம் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில், உத்தரபிரதேச மாநில அரசு, டெல்லியில் பாகிஸ்தானில் இயங்கி வரும் தொழிற்சாலைகளே மாசிற்கு  காரணம் என நீதிமன்றத்தில் வாதம் செய்தது.

இதைக்கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,  அதனால் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை மூடிவிடலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.