செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (17:13 IST)

ஒலிம்பிக் மல்யுத்த போட்டி.! அமன் ஷெராவத் அரை இறுதிக்கு தகுதி..!

Aman
பாரிஸ் ஒலிம்பிக்  மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.   
 
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் விளையாட்டில் 57 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அமன் ஷெராவத் ரஷ்யாவின் ஜெலிம்கான் அபகரோவ் என்பவரை எதிர்கொண்டார். 
 
அபாரமாக விளையாடிய அமன் ஷெராவத், ரஷ்ய வீரரை கிடுக்குபிடி நகர்வுகளால் திணறிடித்தார். இறுதியில் அமன் ஷெராவத் 12-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார்.
 
இந்த வெற்றியின் மூலம் அமன் ஷெராவத் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அமன் ஷெராவத் ஜப்பான் வீரர் Rei Higuchi என்பவரை எதிர்கொள்கிறார். இவர்கள் இருவருக்குமான ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறுகிறது.

 
அரை இறுதி ஆட்டத்திலும் அமன் ஷெராவத் வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார். இருப்பினும், அரைஇறுதிக்கு தகுதி பெற்றதன் மூலமே அமன் ஷெராவத் பதக்கத்தை உறுதி செய்தார்.