தொடர்புடைய செய்திகள்
- வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை வினேஷ் போகத்க்கு அளிக்கப்படும்! - ஹரியானா அரசு அறிவிப்பு!
- 140 கோடி இந்தியர்களின் தங்கக் கனவை தகர்த்துள்ளது.. வினேஷ் குறித்து ஈபிஎஸ்
- வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் மாற்றமில்லை..! சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டம்..!!
- "வீழ்த்த முடியாத வீராங்கனை வினேஷ் போகத்".! மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பெருமிதம்.!!
- அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் பெறுவார்.. வினேஷ் போகத் குறித்து மாமா நம்பிக்கை..!
ஒலிம்பிக் விதிகள் மீறல்.. இன்னொரு இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்..!
ஏற்கனவே இந்தியா வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு இந்திய மல்யுத்த வீராங்கனையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஒலிம்பிக் விதிகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் என்பவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய பயிற்சியாளர் குழுவும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு மட்டுமே அனுமதி உள்ள அங்கீகார அட்டையை தன் சகோதரி இடம் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்திற்குள் ஆண்டிம் பங்கல் அனுப்பி உள்ளதாகவும் இதனை அடுத்து ஆண்டிம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர் அடங்கிய குழுக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்ததை அடுத்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
