வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (14:24 IST)

தங்கம் வென்ற சீன வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தினாரா? மீராபாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு

தங்கம் வென்ற சீன வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தினாரா?
நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் சீன வீராங்கனை பளுதூக்கும் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளிவந்து உள்ளதால் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஒலிம்பிக் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் இந்தியாவின் மீராபாய் மட்டுமே பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது இதனால் இந்தியா பதக்கப் பட்டியலில் 25வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ சிஹூய் என்பவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவரது தங்கப்பதக்கம் பறிமுதல் செய்யப்படும் என்றும் வெள்ளி வென்ற இந்தியாவின் மீராபாய் பானுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.