டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; தங்கம் வெல்வாரா பி.வி.சிந்து?! – முதல் சுற்றில் வெற்றி!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 25 ஜூலை 2021 (08:59 IST)
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பேட்மிண்டனில் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் போட்டியிலேயே இஸ்ரேலிய வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் வென்று இந்தியாவிற்காக தங்கம் வெல்வாரா பி.வி.சிந்து என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :