வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 24 ஜூலை 2021 (22:14 IST)

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய்க்கு ரூ1. கோடி பரிசு - முதல்வர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்றுக் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மீராபாய் இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இவருக்கு இந்திய பிரதமர்  மோடி வாழ்த்துகள் தெரிவித்து பேசினார். இந்திய மக்கள் வீராங்கனை மீரா பாய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.  

மேலும், நான் வென்ற பதக்கத்தை இந்தியாவுக்குச் சமர்ப்பிக்கிறேன் என மீராப்பாய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.