மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது நியூசிலாந்து..!
கடந்த சில நாட்களாக மகளிர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி தென்னாபிரிக்க அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. அதற்காக அந்த அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அமெலா கெர் 43 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து, 159 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாபிரிக்கா அணி தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், அதன் பின்னர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க அணி லீக் கட்டத்தில் மிக அபாரமாக விளையாடினாலும், இறுதி போட்டியில் சொதப்பியதால் கோப்பையை இழந்தது.
Edited by Siva