முதல் டி20 போட்டி; டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் செய்ய முடிவு
நியூசிலாந்து - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்து தற்போது டி20 போட்டி தொடங்கியுள்ளது. ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று முதலாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது. கடந்த வருடம் நடைபெற்ற டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.