திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (19:58 IST)

பிரம்மபுத்திரா நதியை கடத்த திட்டம்; மறுப்பு தெரிவித்த சீனா

பிரம்மபுத்திரா நதியை 1,000 கி.மீ தூரம் சுரங்கம் அமைத்து கடத்தி செல்ல சீன பொறியாளர்கள் அரசிற்கு அறிக்கை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில்தான் பிரம்மபுத்ரா நதி உருவாகிறது. சீனாவில் இந்த நதியை யர்லங் ட்சங்போ என்று பெயரில் அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைத்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள வரிகுடா கடலில் கடக்கும்.
 
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி இந்தியாவை அதர வைத்துள்ளது. திபெத்தின் சங்ரி கவுண்டி என்ற இடத்திலிருந்து டக்லமஹன் என்ற இடத்திற்கு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுரங்க பாதை அமைத்து பிரம்மபுத்திரா நதி தண்ணீரை கொண்டு செல்லும் வகையில் திட்டம் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் அதற்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த செய்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சீன அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹூவா சன்யிங், இந்த தகவல் உண்மையில்லை. எல்லை தாண்டி செல்லும் நதி தொடர்பான ஒப்பந்தத்திற்கு சீனா வழக்கம்போல் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.