புதன், 18 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (10:42 IST)

உங்களுக்கேப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் – தோனி குறித்து எம்.எஸ்.கே பிரசாத் !

இந்திய அணியில் தோனியின் நிலை குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி 20  மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே டி 20 அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை தோனிக்குப் பதிலாக விக்கெட் கீப்பராக  ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக்கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஒரு சர்வதேசப் போட்டியில் கூட தோனி விளையாடவில்லை. அதனால் அவர் இனி இந்திய அணியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது அவர் ‘உலகக்கோப்பைக்குப் பிறகு நாங்கள் ரிஷப் பந்த் மீதுதான் கவனம் செலுத்தி வருகிறோம். தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவது, அல்லது ஓய்வு பெற முடிவெடுப்பது என்பது அவரது தனிப்பட்ட விஷயம். எதிர்காலத்துக்கான வரைபடத்தை நாங்கள் ஏற்கனவே உருவாக்கி விட்டோம். சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்துள்ளோம், ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளோம்.. ஏன் ? . எங்கள் அணித் தேர்வைக் கொண்டே நீங்கள் இதை புரிந்து கொள்ளலாம்.’ எனக் கூறியுள்ளார்.

தேர்வுக்குழு தலைவர் இத்தகைய பேச்சு தோனி இனி இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பில்லை என்ற ஊர்ஜிதங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது.