பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
அதன் பின்னர் ஆடிவரும் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கே எல் ராகுல் தவிர மற்ற அனைவரும் சொதப்ப பின்வரிசையில் வந்த ஜடேஜா, பும்ரா ஆகியோர் நிதானமாக ஆடி 252 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்களை இழந்து ஆடி பாலோ ஆனை தவிர்த்துள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியுள்ளார். அவர் இந்த போட்டியில் 6 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பந்து வீசினால் காயம் அதிகமாகும் என்பதால் அவர் இனி பந்து வீச மாட்டார் எனத் தெரிகிறது.
இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.