புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (09:48 IST)

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் போராட்டம் வெற்றி – 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் !

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு அதற்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இயங்கி முன்னணி தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் 4ஜி க்கு மாறி விட்டன. ஆனால் பொதுத்துறை நிறுவனமான பி எஸ் என் எல் க்கு நீண்ட காலமாக 4ஜி ஸ்பெக்ட்ரம் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்து கடன் சுமையில் சிக்கித் தவித்தது.

தனியார் நிறுவனமான ஜியோவின் வளர்ச்சிக்காகவே பிஎஸ் என் எல்-க்கு 4 ஜி கொடுக்க மறுப்பதாக அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை இப்போது பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் 4 ஜி சேவைகளை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் இரு நிறுவனங்களுக்கும் புத்துயிர் அளிக்கும் விதமாக 30000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.