1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (13:36 IST)

தோனி க்ளவ்ஸில் இருந்த அந்த சிம்பல் என்ன? வைரலாகும் புகைப்படம்!

இந்திய அணியின் விக்கேட் கீப்பர் தோனி நேற்று போட்டியில் நாட்டை பொருமைப்படுத்தும் வகையில் ஒரு விஷயத்தை செய்துள்ளார். 
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது தோல்வியை தழுவியது.
 
போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்கள் எடுத்தது. 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 122 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோகித் ஷர்மாவின் சிறப்பானா ஆட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதை தவிர்த்து தோனியின் க்ளவ்ஸில் இருக்கும் குறியீடு ஒன்றும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  
ஆம், தோனி நேற்று கீப்பிங் செய்த போது அணிந்திருந்த க்ளவ்ஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ”பாலிதான்” என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் ஆர்த்தம் தியாகம். 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தோனி 2015 ஆம் ஆண்டு பாராமிலிட்டரி பிரிவில் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 
நேற்றைய க்ளவ்ஸில் மட்டுமின்றி தோனி தனது மொபைல் கவர், கேப் போன்றவற்றில் இந்த முத்திரை காணப்படும்.