திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (13:22 IST)

1000-வது போட்டியில் சிறந்த ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி!

ஃபிஃபா 22 வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அர்ஜ்ண்டினா அணி   நேற்று ஆஸ்திரெலியா அணிக்கு எதித்து விளையாடியது.

இதில், தன் 1000 வது போட்டியில் களமிறங்கிய மெஸ்ஸி 35 வது  நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். இதுவரை 5 உலகக் கோப்பையில் விளையாடியுள்ள மெஸ்ஸி,  நாக் அவுட் சுற்றில் அடித்த முதல் கோல் இதுவாகும்.

எனவே, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 2 வது இடத்திலுள்ள முன்னாள் வீரர் மாரடோனாவின்(8 கோல்கள்) சாதனையை முய்றித்துள்ளார் மெஸ்ஸி(9 கோல்கள்)

நேற்று தன் 1000 வது போட்டியில் விளையாடிய மெஸ்ஸி சிறந்த ஆட்ட நாயகனுக்கான விருதை வென்றார்.