1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2016 (17:38 IST)

120 கால ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு தங்கம் வென்று ஜிம்னாஸ்டிக் வீரர் சாதனை

ரியோ ஒலிம்பிக்கில் பிரிட்டனை சேர்ந்த மேக்ஸ் விட்லாக், ஜிம்னாஸ்டிக் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
 

 
ஆடவர் ப்ளோர் எக்சசைஸ் பிரிவில் 15.633 புள்ளிகள் சேர்த்து மேக்ஸ் விட்லாக் தங்கப் பதக்கம் வென்றார். பிரேசிலை சேர்ந்த டியாகோ ஹிப்போலிட்டோ வெள்ளிப் பதக்கத்தையும், ஆர்தர் மரியானோ வெண்கலப் பதக்கதையும் வென்றனர்.
 
இதேபோல் பொம்மல் ஹார்ஸ் பிரிவிலும் மேக்ஸ் விட்லாக் தங்கப் பதக்கம் வென்றார். 15.966 புள்ளிகள் சேர்த்து தங்கப் பதக்கத்தை அவர் தன்வசமாக்கினார். இந்தப் பிரிவில் பிரிட்டனை சேர்ந்த மற்றொரு வீரர் லூயிஸ் ஸ்மித் இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவை சேர்ந்த அலெக்சாண்டர் நடடோர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
 
இதன் மூலம் பிரிட்டனின் 120 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இரண்டு தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.