வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (09:57 IST)

திருநங்கைகள் மட்டுமே உள்ள கால்பந்து அணி – குவியும் பாராட்டுகள் !

இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் திருநங்கைகள் மட்டுமே உள்ள முதல் கால்பந்தாட்ட அணி உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் என சொல்லப்படும் திருநங்கைகள் தடைகளைத் தாண்டி இப்போது பல துறைகளிலும் சாதித்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக மணிப்பூரில் முதன் முதலாக 14 பேர் கொண்ட முதல் திருநங்கைகள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அணியை அரசு சாரா நிறுவனமான 'யா ஆல்' உருவாக்கியுள்ளது. 14 திருநங்கைகள் கொண்ட அணி கடந்த மார்ச் 8 ஆம் தேதி 7 பேர் கொண்ட இரு அணிகளாக பிரிந்து நட்பு ரீதியிலானப் போட்டில் பங்கேற்றனர். முதன் முதலாக திருநங்கைகள் மட்டுமே கொண்ட அணியை உருவாக்கியுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.