புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (16:17 IST)

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரின் திருமணம் ! இணையத்தில் குவியும் பாராட்டு !

லலிதாவின் திருமணப் புகைப்படம்

மகாராஷ்டிராவில் பெண்காவலராக லலிதா என்பவர் தன்னை ஆணாக மாற்றிக் கொண்டுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா குமாரி. பெண் காவலராக பணிபுரிந்து வந்த இவர் தனக்குள் ஆண் தன்மை அதிகமாக இருப்பதை உணர்ந்து தன்னை பெண்ணாக மாற்றிக்கொள்ளும் அறுவை சிகிச்சையை செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமாக அம்மாநில அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் ஆண் காவலராக பணியில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர அது இப்போது வைரலாகி அனைவரும் பாராட்டையும் வாழ்த்தையும் பெற்று வருகிறது.