செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2024 (07:18 IST)

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை.. சொதப்பிய சன்ரைசர்ஸ்.. கொல்கத்தா அபார வெற்றி..!

நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் ஒரு சிக்சர் அடித்தும் அடுத்த ஐந்து பந்துகளில் 7 ரன்கள் அடிக்க முடியாமல் ஹைதராபாத் அணி சொதப்பி தோல்வி அடைந்தது.

ஐபிஎல் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அபாரமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 209 என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் முதல் பந்தில் ராணா சிக்சர் அடித்ததால் அடுத்த ஐந்து பந்துகளில் வெறும் ஏழு ரன்கள் தேவை என்பதால் கொல்கத்தா அணி மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூன்றாவது மற்றும் ஐந்தாவது பாதியில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்த ரஸல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Edited by Siva