செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (08:29 IST)

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது – அதிர்ச்சியான கோலி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று புனேவில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் கடைசிநேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் ஆட்டநாயகன் விருது 95 ரன்கள் சேர்த்த சாம் கரனுக்கும், தொடர்நாயகன் விருது ஜானி பேர்ஸ்டோவுக்கும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி ‘ஆட்டநாயகன் விருது ஷர்துல் தாக்கூருக்கும், தொடர்நாயகன் விருது புவனேஷ்வர்குமாருக்கும் வழங்கப்படாதது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது’ எனக் கூறியுள்ளார். நேற்றைய போட்டியில் தாக்கூர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசினார் புவனேஷ்வர் குமார்.