1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (18:07 IST)

தமிழர்களை மதிக்காத இந்தியா, இந்தியாவாகவே இருக்காது: சேலம் மாநாட்டில் ராகுல் காந்தி!

தமிழர்களை மதிக்காத இந்தியா, இந்தியாவாகவே இருக்காது
தமிழர்களை மதிக்காத இந்தியா இந்தியாவாகவே இருக்காது என சேலம் மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்
 
தற்போது சேலத்தில் திமுக கூட்டணி கட்சியின் தலைவர்களின் மாநாடு நடந்து வருகிறது. இதில் முக ஸ்டாலின், ராகுல்காந்தி, வைகோ உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய போது ’இந்தியா பல்வேறு மாநிலங்களின் ஒருங்கிணைப்பு என்றும் எந்த மொழியும் கலாச்சாரமும் இன்றியமையாதது என்றும் தமிழ் மொழி மட்டுமின்றி அனைத்து மொழிகளுமே முக்கியமானவை என்றும் கூறினார் 
 
தமிழர்களை மதிக்காத இந்தியா ஒரு இந்தியாவாகவே இருக்காது என்றும் மேற்கு வங்க மக்களை மதிக்காத இந்தியா இந்தியாவாகவே இருக்காது என்றும் அவர் கூறினார். தற்போது இருக்கும் அதிமுக பழைய அதிமுக இல்லை என்றும் அதிமுக முககவசம் அணிந்து இருப்பதாகவும், முகக்கவசத்தை கழற்றினால் அதன் பின்னால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இருப்பது தெரியவரும் என்றும் பழைய அதிமுகவின் கதை எப்போதோ முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தற்போதைய முதல்வர் பழனிசாமி ஊழல் செய்துள்ளதால் அமலாக்கத்துறை, சிபிஐ கட்டுப்பாட்டிலுள்ள மோடிக்கு பயந்து தலைகுனிந்து இருக்கிறார் என்றும் இதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்