வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (17:07 IST)

கோலியை காலி செய்த செனூரன் முத்துசாமி! – சூடு பிடிக்கும் டெஸ்ட் தொடர்

விசாகப்பட்டிணத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

நேற்று தொடங்கிய முதல் இன்னிங்சில் 136 ஓவர்களுக்கு 502 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் ஷர்மா 176 ரன்களும் பெற்று சாதனை படைத்தனர். மேலும் இவர்களது பார்ட்னர்ஷிப் 300க்கும் மேல் ரன்களை குவித்து புதிய சாதனையையும் படைத்தது.

மூன்றாவதாக களம் இறங்கிய புஜாரா வெறும் 6 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார். மிடில் ஆர்டரில் களம் இறங்கிய விராட் கோலி 40 பந்துகளுக்கு 20 ரன்களே பெற்றிருந்தார். அப்போது களம் இறங்கிய நாகப்பட்டிணத்தை பூர்வீகமாக கொண்ட செனூரன் முத்துசாமி அபாரமாக பந்துவீசினார். அவரது பந்தை எதிர்கொள்ள முடியாத கோலி வேகமாக பந்தை அடிக்க முயற்சிக்க அதை முத்துசாமியே கேட்ச் பிடித்து கோலியை அவுட் செய்தார்.

முதல் இன்னிங்ஸில் 502 ரன்களுடன் ஆட்டத்தை முடித்துள்ளது இந்தியா. தற்போது தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் இறங்கியுள்ளது.