வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 நவம்பர் 2021 (14:17 IST)

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம்… கே எல் ராகுல் படைக்கும் சாதனை!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிவரும் கே எல் ராகுல் அடுத்த ஆண்டு லக்னோ அணிக்கு ஏலம் எடுக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த தொடக்க ஆட்டக்காரராக செயல்பட்டு வருகிறார் கே எல் ராகுல். இப்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் அவரை புதிதாக தொடங்கப்பட்டுள்ள லக்னோ அணிக்காக ஏலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு 20 கோடி ரூபாய் வரை ஏலத்தொகை கொடுக்க லக்னோ அணி தயாராக உள்ளதாம். லக்னோ அணிக்கு கேப்டனாகவும் கே எல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.