ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:58 IST)

டிசம்பரில் 2022 ஐபிஎல் மெகா ஏலமா?

2022 ஆம் ஆண்டின் மெகா ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்குமான மெகா ஏலம் நடைபெற உள்ளது
 
டிசம்பர் 30-ஆம் தேதி அல்லது ஜனவரி முதல் வாரம் இந்த ஏலம் நடைபெறும் என்றும் இந்த ஏலத்தில் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று விதி இருந்தாலும் சில அணி உரிமையாளர்கள் தங்களது அணியை மொத்தமாக மாற்றிவிட முடிவு செய்துள்ளதாகவும் ஒரு சில அணிகள் மட்டும் சில வீரர்களை தக்கவைத்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி, ருத்ராஜ், ஜடேஜா, ஹசில்வுட் ஆகிய நால்வர் தக்க வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது