அணியில் இடமே கிடைக்காது என நினைத்தேன்… இப்போது துணைக்கேப்டன்!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அசத்தி வரும் கே எல் ராகுல் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கான துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக தனது இடத்துக்காக போராடி இப்போது மூன்று வடிவங்களிலான போட்டிகளிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் கே எல் ராகுல். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா விலகியுள்ளதால் அவருக்கு பதில் துணைக் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள கே எல் ராகுல் ஒரு காலத்தில் எனக்கு டெஸ்ட் அணியில் இடமே கிடைக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.