இந்திய டி 20 கேப்டனாகிறாரா கே எல் ராகுல்?
இந்திய அணிக்கு டி 20 வடிவப் போட்டிகளில் தனது கேப்டன் பொறுப்பை துறந்துள்ளார் கேப்டன் கோலி.
உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர் புதிய கேப்டன் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக ரோஹித் ஷர்மாதான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது. ஆனால் உலகக்கோப்பைக்குப் பின்னர் நியுசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் டி 20 தொடரில் கோலி, ரோஹித் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதனால் அந்த தொடருக்குக் கேப்டனாக கே எல் ராகுல் செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.