செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:11 IST)

டி 20 வெற்றிகள்… தோனியை முந்திய இயான் மோர்கன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இயான் மோர்கன் கடந்த சில ஆண்டுகளாக லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இயான் மோர்கன் மோசமான பேட்டிங் பார்மில் இப்போது இருந்தாலும் அவரது கேப்டன்சியில் பெறும் வெற்றிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. நேற்று இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இது மோர்கன் தலைமையில் 43 ஆவது வெற்றியாகும்.

இதன் மூலம் இந்திய கேப்டன் தோனியின் தலைமையில் இந்தியா அணி வெற்றி பெற்ற 42 வெற்றிகளை முந்தி முதலிடத்துக்கு சென்றுள்ளார்.