1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:01 IST)

நம்ம இயக்குனர் ஷங்கரா இது… மின்னல் வேகத்தில் ஷூட்டிங்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பூனேவில் நடந்து வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார்.

படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷங்கர் படத்தின் படப்பிடிப்புக்காக புனேவில் பிரம்மாண்டமாக 10 கோடி ரூபாய் செலவில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சில சண்டைக் காட்சிகள் மற்றும் கியாரா அத்வானி மற்றும் ராம்சரண் மோதும் காட்சிகளை படமாக்கி வருகிறார்.

வழக்கமாக ஷங்கர் தன் படங்களை மிக மெதுவாக இயக்குவார். ஆனால் இந்த முறை தொடங்கிய வேகத்தில் படப்பிடிப்பை விறுவிறுவென முடிக்க உள்ளாராம். பூனேவில் நடந்துவரும் முதல் கட்ட படப்பிடிப்பு நாளையோடு முடிய உள்ளதாம்.