செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (07:46 IST)

13 பந்துகளில் அரைசதம்.. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை..!

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 14 பந்துகளில் அரை சதம் அடித்தது சாதனையாக இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் அடித்து புதிய வரலாற்று சாதனையை ஏற்படுத்தி உள்ளார். 
 
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய ராஜஸ்தானி 13.1 ஓவர்களில் இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து அந்த அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மிக அபாரமாக விளையாடி 47 பந்துகளில் 98 ரன்கள் அடித்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முன்னதாக 13 பந்துகளில் அரை சதம் அடித்துஜெய்ஸ்வால்   சாதனை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 13.1  ஓவரிலேயே இலக்க எட்டியதால் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் பாசிட்டிவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva