வியாழன், 22 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (12:43 IST)

டெஸ்ட் போட்டியில் இரண்டாவது சதம்! ஜடேஜா அபாரம்!

இலங்கைக்கு எதிரான முதல் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா சதம் அடித்துக் கலக்கியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று மொகாலியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. நேற்றைய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் சேர்த்தார்.  விஹாரி 58 ரன்களும் விராட் கோலி 45 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். இந்திய அணி நேற்று ஓவருக்கு ரன்கள் வீதம் சேர்த்து அதிரடியாக விளையாடியது.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் துரிதமாக ரன்களை சேர்த்து வருகிறது. இன்று சிற்ப்பாக விளையாடிய ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை அடித்துள்ளார். தற்போது வரை இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 491 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா அவுட் ஆகாமல் 119 ரன்களோடு களத்தில் உள்ளார்.