திங்கள், 17 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 மார்ச் 2025 (07:47 IST)

சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட் தொடர்.. இந்தியா சாம்பியன்.. சச்சின் எடுத்த ரன் எவ்வளவு?

சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 45 ரன்களும், சிம்மன்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வினய் குமார் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து, 149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய மாஸ்டர் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 25 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இந்திய மாஸ்டர் அணி 17.1 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva