மகளிர் ஒருநாள் போட்டி: இலங்கையை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!
மகளிர் ஒருநாள் போட்டி: இலங்கையை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் எடுத்தது
இதனை அடுத்து 174 என்ற இலக்கை நோக்கிய விளையாடிய இந்திய அணி 25.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி விட்டது. இதனை அடுத்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
மந்தனா 94 ரன்களும், வெர்மா 71 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது