ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2017 (18:14 IST)

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவி சாஸ்திரி!!

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். 


 
 
அனில் கும்ளேவின் பதவி காலம் சாம்பியன் டிராபி தொடரோடு முடிவடைந்த நிலையில், பிசிசிஐ அவரது பதவியை நீட்டித்தது. ஆனால் கோலிக்கும் கும்ளேவிற்கு இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக கும்ப்ளே பதவி விலகினார்.
 
இதனையடுத்து அடுத்த பயிற்சியாளரை நியமிக்கும் இக்கட்டில் இருந்தது பிசிசிஐ. பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி உள்பட 6 பேர் விண்ணப்பித்தனர். இந்த முறையும் பயிற்சியாளரை கங்குலி, லட்சுமணன் மற்றும் சச்சின் ஆகிய மூவர் அடங்கிய குழுதான் தேர்வு செய்துள்ளது. தேர்வு குழுவின் விருப்பம் சேவாக் ஆக இருந்தபோது கேப்டன் கோலியுடன் கலந்துரையாடி முடிக்க எடுக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார். அதன்படி தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
ரவி சாஸ்திரி இந்தியா - இலங்கை இடையே நடைப்பெறும் தொடரில் இருந்து தனது பணியை தொடங்குவார் என தெரிகிறது. மேலும் இவரது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.