வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (07:00 IST)

இலங்கை செல்லும் இந்திய அணி அறிவிப்பு: தவான் கேப்டன்!

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் மற்றொரு அணி இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இலங்கையில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் மற்றொரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என்றும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த அணியில் உள்ளவர்களின் விபரங்கள் பின்வருமாறு: ஷிகர் தவான், புவனேஷ் குமார், பிபி ஷா, படிக்கல், கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், எம். பாண்டே,  நிதீஷ் ரானா, இஷான் கிஷான், சாம்சன், சாஹல், ஆர்.சஹார், கௌதம், கே. பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹர், சயினி மற்றும் சகாரியா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது