1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (08:06 IST)

ஒலிம்பிக் போட்டி: ஏர் பிஸ்டல் 2-வது சுற்றில் இந்திய ஜோடி தோல்வி

ஒலிம்பிக் போட்டி: ஏர் பிஸ்டல் 2-வது சுற்றில் இந்திய ஜோடி தோல்வி
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி அடைந்த நிலையில் 2-வது சுற்றில் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று அதிகாலை டோக்கியோவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடந்தது. இதில் இந்தியாவில் மனு பாக்கர், மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி முதல் சுற்றில் அபாரமாக விளையாடி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதனையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்று நடந்தபோது அதில் இந்திய ஜோடி மனு பாக்கர், மற்றும் சவுரப் சவுத்ரி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இந்தியாவின் பதக்க கனவு கலைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
ஏற்கனவே ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யசஷ்வினி தேஸ்வால் - அபிஷேக் வர்மா இணை தோல்வி அடைந்தனர்,.