வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2017 (16:01 IST)

இலங்கையில் இந்திய கிரிக்கெட் வீரர் பலி

இலங்கையில் கிரிக்கெட் விளையாட சென்ற இந்திய வீரர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.


 

 
இலங்கையில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து 19 பேர் கொண்ட அணியினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். குஜராத்தை சேர்ந்த மோனாத் சோனா நரேந்திரா என்பவரும் இலங்கைக்கு சென்றிருந்தார். 
 
கடந்த செவ்வாய்கிழமை மோனாத் நீச்சல் குளத்தில் குதித்தவர் வெளியே வரவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நீச்சல் குளத்தின் மேற்பார்வையாளர்கள் உடனடியாக அவரை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 
 
அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.