திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2017 (18:29 IST)

இந்தியாவை வெற்றிப்பெற முட்டிமோதும் இலங்கை!

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.


 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் இந்திய அணி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று டி20 போட்டி நடைபெறுகிறது.
 
நடந்து முடிந்த 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றிப்பெற்று இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. இன்று கொழும்புவில் நடைபெறும் போட்டிலாவது இலங்கை அணி வெற்றிப்பெறுமா? அல்லது வழக்கம் போல் இந்திய அணி வானவேடிக்கை நிகழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.