ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (08:43 IST)

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

India Pakistan
கடந்த சில நாட்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் இன்று சூப்பர் 4 போட்டியில் முக்கிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.  கொழும்புவில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளது 
 
ஏற்கனவே லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது மழை வந்ததால் தலா ஒரு  புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இன்றைய போட்டியில் மழை வராமல் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  
 
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளிலும் வீரர்களில் மாற்றம் ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva