வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (16:29 IST)

நூலிழையில் வெற்றியை இழந்த இந்தியா: நியூசிலாந்து 165/9

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று முடிவடைந்த கான்பூர் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் நூலிழையில் வெற்றியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கான்பூர் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது 
 
ஆனால் இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக மளமளவென விக்கெட்டை இழந்தது. நியூசிலாந்து அணி 169 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்திய அணி நூலிழையில் வெற்றியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது