1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (11:45 IST)

BSNL vs மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள்... விலையில் வித்தியாசம் எவ்வளவு??

BSNL நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் மற்ற நிறுவனங்களின் விலையில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என தெரிந்துக்கொள்ளுங்கள்...

 
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவைகளில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்குகளாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களது ரீசார்ஜ் ப்ளான்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தின.
 
இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதை தொடர்ந்து தற்போது ஜியோவும் தனது ரீசார்ஜ் கட்டணங்களை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அடுத்தடுத்து மூன்று நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இதுதொடர்பாக ட்விட்டரல் #BoycottJioVodaAirtel என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனோடு #BSNL என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாக்கி வருகின்றனர். BSNL நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் மற்ற நிறுவனங்களின் விலையில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என தெரிந்துக்கொள்ளுங்கள்...