மளமளவென விழும் வங்கதேச விக்கெட்டுக்கள்.. ஆனாலும் டிராவை நோக்கி செல்லும் போட்டி..!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது கிரிக்கெட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற்று வரும் நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டத்தில் மளமளவென மூன்று விக்கெட்டுகள் விழுந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து, வங்கதேச அணி சற்றுமுன் 62 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்துள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப் தலா இரண்டு விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
முன்னதாக போட்டி தொடங்கிய முதல் நாளில் வங்கதேச அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளிலும் மழை பெய்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், வங்கதேச அணி இன்னும் முதல் இன்னிங்க்ஸை முடிக்கவில்லை. இதனால், இந்த போட்டி டிராவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
Edited by Mahendran