செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:16 IST)

இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றி தொடருமா?

ind vs aus
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் இந்தியா புத்துணர்ச்சியுடன் இந்த போட்டியில் களமிறங்குகிறது என்பதும் குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற் பந்துவீச்சு இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரே களமிறங்க உள்ளார் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் நூறாவது போட்டி இது என்பது குறிப்பிடப்பட்டது. 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் புஜாரே பெறுகிறார்.
 
Edited by Siva