1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:38 IST)

இந்த ஆண்டில் பல கொரோனா அலைகள் தாக்கும்; மருத்துவ அதிகாரி எச்சரிக்கை

corona
ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா அலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பல கொரோனா அலைகள் தாக்கும் என அந்நாட்டின் மருத்துவ அதிகாரி பால் கெல்லி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
வருங்காலத்தில் ஆஸ்திரேலியாவில் அதிக கொரனா அலைகள் தாக்கும் என்றும் இந்த ஆண்டு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அலைகள் தாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 ஆஸ்திரேலியா அரசு அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களை திரும்பி பார்த்தால் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா மட்டுமின்றி  வேறு சில நோய்கள் பற்றியும் இந்த தருணத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அதனால் எதிர்காலத்திற்கு நம்மை நாம் தயார் படுத்தி கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva