1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (23:17 IST)

அஜித் தோவலின் வெளிநாடு பயணம் பாகிஸ்தானில் அதிகம் விவாதிக்கப்படுவது ஏன்?

Ajit Doval
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்தார்.
 
ஆப்கானிஸ்தான் தொடர்பாக பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் சென்றிருந்தார்.
 
அஜித் தோவல் தவிர இரான், கஜகஸ்தான், சீனா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
ஆப்கானிஸ்தானில் நிலவும் மனிதாபிமான சவால்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் அஜித் தோவல் சந்தித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை சந்திக்க புதின் நெறிமுறைகளை மீறி வந்தார்.
 
அதிபர் புதின் ஒரு நாட்டின் NSA அல்லது கேபினட் அமைச்சர்களை சந்திப்பது அரிதாகவே நடக்கும். அதுவும் அஜித் தோவல் ரஷ்ய பயணத்திற்கு முன்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு சென்றிருந்த நிலையிலும் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவும் பிரிட்டனும் யுக்ரேனுக்கு ஆதரவாக உள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. ஆனால் யுக்ரேன் நெருக்கடியில் இந்தியா எந்த தரப்பிலும் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 
இந்த ஆண்டு ஜி-20 மற்றும் எஸ்சிஓ உச்சி மாநாடுகளை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. ஜி-20 மாநாட்டில் ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
இந்தியாவின் பிரச்சனை என்னவென்றால், 2020 முதல் சீனாவுடனான எல்லையில் பதற்றம் உள்ளது. மறுபுறம், 'சீனாவுடனான நட்பு எல்லைக்கு அப்பாற்பட்டது' என்று கடந்த ஆண்டு ரஷ்யா அறிவித்திருந்தது.
 
 
அமெரிக்காவுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் நெருக்கம், சீனாவுடனான அதிகரித்து வரும் பதற்றத்துடன் தொடர்புடையதாக காணப்படுகிறது..
 
மேற்கத்திய நாடுகளுடனும், இந்தோ-பசிபிக் பகுதிக்கான குவாட் குழுவுடனும் இந்தியாவின் அதிகரித்து வரும் நெருக்கம் குறித்து ரஷ்யா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் குறித்து இந்தியா தனது ஆட்சேபத்தையோ, அமெரிக்காவுடன் அதிகரித்துவரும் இந்தியாவின் நெருக்கம் குறித்து ரஷ்யா தனது கோபத்தையோ வெளிப்படுத்தவில்லை.
 
பிரிட்டனின் பாதுகாப்பு ஆலோசகர் டிம் பாரோவை பிப்ரவரி 4ஆம் தேதி லண்டனில் அஜித் தோவல் சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் கலந்து கொண்டார். இது தவிர, பிப்ரவரி 2ம் தேதி வாஷிங்டனில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனையும், அஜித் தோவலைச் சந்தித்தார்.
 
"உலகளாவிய சவால்களைத் தீர்க்க இந்தியாவுடன் அமெரிக்கா ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது. செயல் உத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஒரு நல்ல உரையாடல் நடைபெற்றது," என்று அஜித் தோவலை சந்தித்த பிறகு ஆண்டனி பிளிங்கன் கூறினார்.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
அஜித் தோவலின் புதினுடனான சந்திப்பு குறித்து பாகிஸ்தானில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வருகை இந்தியாவுக்கு பின்னடைவாக ஒரு சமயத்தில் பார்க்கப்பட்டது. ஆயினும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பிடி மெதுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
 
பாகிஸ்தானிய அமெரிக்க தொழிலதிபரும் 'முஸ்லிம் ஆஃப் அமெரிக்கா' அமைப்பின் தலைவருமான சஜித் என். தரார் தனது ட்விட்டர் பதிவில், "அஜித் தோவல் சர்வதேச சுற்றுப்பயணத்தில் இருந்தார். அமெரிக்காவிடமிருந்து ராணுவத் தொழில்நுட்பம் அவருக்கு கிடைக்கிறது. பிரிட்டனில் தீவிரவாதம் குறித்துப் பேசினார். ரஷ்யாவில் நடந்த ஆப்கானிஸ்தான் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். தற்போது பாகிஸ்தானில் என்எஸ்ஏ இல்லை. ஆப்கானிஸ்தான் உச்சிமாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இதுதான் பாகிஸ்தானின் எதிர்காலமா?" என்று குறிப்பிட்டிருந்தார்.
 
தால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
அஜித் தோவல் பிரிட்டனில் இருந்தபோது, பாகிஸ்தானின் ராணுவத் தளபதியும் பிரிட்டனில் இருந்தார்.
 
"ஒரு டாலரின் மதிப்பு 89.84 ஆப்கன் ஆப்கானி (ஆப்கானிஸ்தானின் நாணயம்). பாகிஸ்தானில் ஒரு டாலரின் விலை 271.24 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் நிதி அமைச்சர்கள் தாலிபன் பொருளாதார கழகத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்," என்று சஜித் தரார் எழுதியுள்ளார்.
 
வெளியுறவு அமைச்சகம் விரும்பாததால் பாகிஸ்தானின் என்எஸ்ஏ இல்லை என்று இந்தியாவில் பாகிஸ்தான் தூதராக இருந்துள்ள அப்துல் பாசித் கூறுகிறார். பாகிஸ்தானில் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் PML (N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் PPP தலைவர் பிலாவல் பூட்டோவிடம் உள்ளது.
 
ஆப்கானிஸ்தான் தொடர்பான மாஸ்கோ உச்சி மாநாட்டில் அஜித் தோவல் கலந்துகொண்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் செய்தியாளர் ஆலியா ஷா, " ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபிறகும் இந்தியாவின் செல்வாக்கு குறையவில்லை," என்றார்.
 
வல்லரசுகளின் தாக்கம்
பாகிஸ்தானில் உள்ள சர்வதேச அரசியல் ஆய்வாளரான டாக்டர் கமர் சீமா, அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தின் இந்திய-அமெரிக்க பேராசிரியரான முக்தர் கானிடம் அஜித் தோவலின் பயணம் குறித்து கேட்டபோது, "அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்றும் அணு சக்தி நாடுகள் மூன்றுமே ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள். இந்த மூன்று நாடுகளுக்கும் அஜித் தோவலின் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது," என்று அவர் பதில் அளித்தார்.
 
"இந்தியாவில் தூதாண்மையின் மூன்று நிலைகள் உள்ளன. பிரதமர் மோதியே தூதாண்மை செய்கிறார். மோதி பயணம் செய்யும் போது தூதாண்மையே அவரது மனதில் இருக்கிறது. மே மாதம் நரேந்திர மோதி விருந்தினராக அமெரிக்கா செல்கிறார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டாம் நிலை தூதாண்மையின் மையம் மற்றும் அஜித் தோவல் மூன்றாவது இடத்தில் உள்ளார்."
 
"தோவல் மற்றும் ஜெய்சங்கர் மீது பிரதமர் மோதிக்கு சிறப்பு நம்பிக்கை உள்ளது. தோவல் 2014 முதல் பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார். அமெரிக்காவில் தோவலுடனான சந்திப்பு அதிபர் மாளிகையில் நடைபெற்றது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வெளியுறவு அமைச்சருமான ஆண்டனி பிளிங்கன் தோவலை சந்தித்து பேசினார். பிலாவல் புட்டோவும் தோவலுக்கு முன் அமெரிக்கா வந்திருந்தார். ஆனால் ப்ளிக்கன் அவரை சந்திக்கவில்லை. யுக்ரேன், இந்தியா குறித்து மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிராக எந்தவிதமான தடைகளையும் விதிக்க அமெரிக்கா விரும்பவில்லை," என்று முக்தர் கான் குறிப்பிட்டார்.
 
பிரிட்டனின் NSA உடனான சந்திப்பில் ரிஷி சுனக் கலந்துகொண்டிருப்பதும் ஒரு முக்கியமான நிகழ்வு. அதேபோல் ரஷ்யாவில் அதிபர் புதின் அஜித் தோவலை சந்தித்துள்ளார் என்று முக்தர் கான் கூறினார்.
 
பாகிஸ்தானின் கவலை பற்றிப்பேசிய முக்தர் கான் "பாகிஸ்தானிடம் என்எஸ்ஏ இல்லை. பாகிஸ்தான் அழைக்கப்பட்டது. ஆனால் அது செல்லவில்லை. இந்த கூட்டத்தில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எல்லா என்எஸ்ஏக்களும் கலந்து கொண்டனர். மாஸ்கோவில் தோவலுக்கு கிடைத்த முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதலீடு செய்வதை ஆப்கானிஸ்தான் நிறுத்தவில்லை. இந்தியாவும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானால் அதிகம் பாதிக்கப்படுவது பாகிஸ்தான் தான்," என்றார்.
 
இந்தியா சீனாவுடன் நல்லுறவுடன் இருக்க விரும்புகிறது, இரானுடன் இருக்க விரும்புகிறது, ரஷ்யாவுடன் வெளிப்படையாக சிறந்த உறவை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா மோசமாக உணரவில்லையா என்று கமர் சீமா கேட்டார். இதற்கு பதிலளித்த முக்தர் கான், "இந்தியா இல்லாமல் அமெரிக்கா ஆசியாவில் காலூன்ற முடியாது. முறைசாரா உரையாடல் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. மாஸ்கோவில் அமெரிக்காவின் குரலாக இந்தியா உள்ளது என்று நான் கருதுகிறேன். அமெரிக்காவின் உலகளாவிய செயல் திட்டங்களுக்கும் இந்தியா தொடர்பான செயல் திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறைந்து வருகிறது," என்றார்.
 
தற்போது நிலைமை மாறிவிட்டது என்கிறார் கமர் சீமா. "ஆப்கானிஸ்தான் நிலத்தை தனக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்று முன்பு இந்தியா கூறிவந்தது. ஆனால் இப்போது இதையே பாகிஸ்தான் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது," என்கிறார் அவர்.