திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2024 (09:21 IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை.. இந்தியாவுக்கு 2வது தோல்வி.. அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா?

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து, அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில், 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வி அடைந்தது. கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌர், ஓரளவு நிலைத்து விளையாடி 54 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், இந்திய அணி தற்போது நான்கு போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என்ற நிலையில் உள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளதால், அந்த போட்டியிலும் கண்டிப்பாக நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளதால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்திய அணியின் அடுத்த சுற்று கேள்விக்குறியாகிவிடும்.

இந்நிலையில்  இந்தத் தொடரின் முதல் செமி பைனல் அக்டோபர் 17ஆம் தேதியும் இரண்டாவது செமி பைனல் அக்டோபர் 18ஆம் தேதியும் இறுதி போட்டி அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva